திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது.
மழை வேண்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முக்கியமான கோயில்களில் யாகம், வருண ஜபம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மழை வேண்டி நடைபெற்ற யாகத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆண்டாள் சன்னதி அருகே பூரண கும்பம் அமைத்து அக்னி வளர்த்து மந்திரங்களை ஓதி பட்டாச்சாரியார்கள் யாகம் நடத்தினர். யாகம் நடத்துவதால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது.