இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலில் சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள் தங்களின் தாயகத்திற்கு ஆர்வமுடன் திரும்புகின்றனர். அனைத்து விமான நிலையங்களுக்கு வரும் இலங்கை மக்கள் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக our new president என்ற வாசகத்துடன் கோத்தபய ராஜபக்சேவின் புகைப்படத்தை எடுத்து செல்கின்றனர்.இவர்களின் வருகையால் விமான நிலையங்கள் எங்கும் இலங்கை கொடிகளால் சூழ்ந்துள்ளது.
இதுவரை இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலிலே வெளிநாட்டில் வாழும் 50,000 வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் இலங்கைக்கு வாக்களிப்பதற்காக செல்வது இதுவே முதல் முறை.
நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post