மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்தை காப்போம், ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில், எதிர்க்கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிவித்தார்.
வரும் திங்களன்று மாலை ஐந்தரை மணி அளவில், தேர்தல் ஆணையத்துக்கு இதை எடுத்து சென்று முறையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையம் ஒரு மாற்று ஏற்பாட்டினை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Discussion about this post