வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குப்பைகளை தேக்கி வைத்தால் அபராதம் – மாநகராட்சி ஆணையர்

வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குப்பைகளை தேக்கி வைத்தால் அபராதம் விதிக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளைச் சேர்ந்த தூய்மைப் பணி ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன், ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கையுறை, முகக்கவசம் போன்ற திடக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார். மணலியில் உள்ள தொழிற்கூடத்தில் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் திடக்கழிவுகள் எரிக்கப்படுவதாக தெரிவித்தார். காலி மனைகளில் தேங்கி நிற்கும் மழை நீரில் உற்பத்தியாகும் கொசுக்களை ஒழிப்பது சவாலாக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட காலி மனையின் உரிமையாளர்கள் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version