ப்ரோடான் பீம் தெரபி என்பது இந்தியாவில் பெரிதாக எங்கும் பயன்பாட்டில் இல்லாத மருத்துவமுறை. ஆனால் அது தமிழ்நாட்டின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சைக்காக அளிக்கப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் மேற்கு மற்றும் தெற்காசிய நாடுகளிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மருத்துவமுறை உள்ளது. இந்த ப்ரோடான் பீம் தெரெபி எதற்கு முக்கியமாக பயன்படும் என்றால், இதன் மூலம் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் உள்ள புற்றுநோய்க் கட்டிகளை அகற்ற முடியும்.
இதனை சுருக்கமாக பிபிடி என்பார்கள். இந்த பிபிடி முறை மூலம் கதிர்வீச்சுக்களை செலுத்தி எல்லா வகையான புற்றுநோய் கட்டிகளையும் முழுமையாக குணப்படுத்த முடியும். இந்த பிபிடி முறை மூலம் தற்போது வரை சென்னை அப்பல்லோவில் 900 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். குறிப்பாக அதில் 47% பேர் மூளைப் புற்றுக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகும். இந்த சிகிச்சைமுறையானது இன்னும் சரிவர இந்தியாவிற்குள் அறிமுகமாகவில்லை. இந்த பிபிடி எந்திரத்தின் விலை ஐநூறு கோடியாகும்.