அதிகளவு மாசு ஏற்படுத்திய புகாரில், ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் 24 மணிநேரத்தில், 100 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களில், நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவு புகை வெளியிடப்படுவதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என கடந்த நவம்பரில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை செலுத்தப்படவில்லை.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நாளை மாலைக்குள் 100 கோடி ரூபாயை மத்திய மாசுகட்டுப்பட்டு வாரியத்திடம் செலுத்தாவிட்டால், ஃபோக்ஸ்வேகன் இந்திய மேலாண் இயக்குனரை கைது செய்ய நேரிடும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்தது. இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.