பழனியில் வீடு இல்லாத திருநங்கைகளுக்கு தமிழக அரசுசார்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு தரமறுப்பதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அரசுசார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பழனி சார் ஆட்சியர் அருண் ராஜ், கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து, அவர்களிடம் மனுக்களை பெற்றார். அதன்படி 27திருநங்கைகளுக்கு தலா 2 செண்ட் நிலம் இலவசமாக வழங்கப்பட்டு அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய தமிழக அரசுக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post