நாடாளுமன்ற தேர்தலுக்காக 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 4 முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆய்வுப்பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தேர்தல் அலுவல்கள் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றார்கள். தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதவி இயந்தரங்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.இந்த இயந்திரங்கள் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்கப்படும். பின்னர் பழுதான இயந்திரங்கள் சரிசெய்யப்படும்.
ஜூலை 4 ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். அதனைத்தொடந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வாக்குபபதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து விளக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 68,036 வாக்குச் சாவடிகள் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப்பொறுத்து தேவைப்படும் வாக்குப்பதவு இயந்திரங்கள் அதகரிக்கப்படும். 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளது.
கன்ட்ரோல் யூனிட் 1,02,581, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் Vvpat இயந்திரங்கள் 1,08 732 தயார்நிலையில் உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் 1500 வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கால் ஆண்டுக்கு( ஜன1 ஏப்1 ஜூலை1 அக்1 )ஒருமுறை 18 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர்பட்டியலில் பெயர் இணைத்து கொள்ளலாம்.
அனைத்து வாக்குசாவடிகளிலும் VVPat பயன்படுத்தப்படும். என்றார்
Discussion about this post