குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கும்: மத்திய அரசு

இந்தாண்டுக்கான குளிர்கால கூட்டுத் தொடர் வரும் நவம்பர் 18-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இறுதியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இந்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் மாதம் 18-ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version