பரமக்குடி அருகே 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை கடந்த மாதம் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி மகளிர் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிபிசிஐடி-க்கு வழக்கை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு உள்ளது.