பிரான்ஸில் பாராசூட் வீரர் ஒருவர் வானிலிருந்து பறந்து சரியாக குதிரை மீது அமர்ந்து சாகசம் செய்துள்ளார்.
லேக் அன்னிஸி என்ற இடத்தில் எலியாட் நோகஸ் என்பவர் பாராசூட் மூலம் சாகசம் செய்தார். மலை உச்சியில் நண்பரின் தோளில் ஏறி அங்கிருந்து குதித்து, ஆயிரத்து 250மீட்டர் உயரத்தில் பறந்தார். பின், தலைகீழாக குட்டிக் கரணம் அடித்தும் சாகசம் செய்தார். இறுதியில் தனது தோழியை குதிரையில் பயணிக்க வைத்து எலியாட் வானில் பறந்தபடியே கீழ் இறங்கினார். குதிரை ஓட்டிக் கொண்டிருந்த தோழியின் பின்பக்கமாக லாவகமாக அமர்ந்து சாதனை படைத்துள்ளார். இந்த காணொலி காட்சிகள் தற்போது வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post