பாபநாசத்தில் கார் ஓட்டுநர் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மேலசெம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரனுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக, தாய் சிவகாமி தூக்க மாத்திரை உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 12 ஆம் தேதி தாய் சிவகாமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமானால் தனது சொத்தை பிரித்து தருமாறு கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரனிடம் வலியுறுத்தி உள்ளார். ஆனால் மகேந்திரன் சொத்தை பிரிக்க மறுத்துவிட்டார் .இந்நிலையில் பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய கஜேந்திரன் பாத்ரூமில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் தன் சகோதரர் மகேந்திரனுடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது தொடர்ந்து பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் நாகரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றனர். கஜேந்திரன் மனைவி நந்தினி தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார் கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post