பன்னீர்-டிடிவி ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்கள் சேராததால், தள்ளாத வயதான பாட்டிகளை காசு கொடுத்து அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் கிடைக்காமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாட்டிகளைக் கூட்டி வந்து கூட்டம் சேர்த்துள்ளனர் பன்னீர்-டிடிவி ஆதரவாளர்கள்.
நீதிமன்ற தீர்ப்புகளையும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி அதிமுக பெயரையும், கொடியையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் பன்னீர்செல்வம்-டிடிவி ஆதரவாளர்கள்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்கள் கிடைக்காமல், இரு தரப்பினரும் தனித்தனியாக பாட்டிகள் பலரை வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். வந்திருந்த மூதாட்டிகள் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் இடக் கூட தெம்பில்லாமல் சாலையில் கிடைத்த இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்து வந்தனர்.
அழைத்து வரப்பட்டவர்களுக்கு அவ்வப்போது தேநீர், உணவு என வழங்கி டயர்டாகாமல் பார்த்துக் கொண்டனர் பன்னீர், டிடிவி ஆதரவாளர்கள்.
ஒரு கண்டன கோஷத்துக்கு கூட வாயை திறக்காமல் அமைதியாக சாலையில் அமர்ந்து மௌனம் காத்தனர் ஆயாக்கள். ஆர்ப்பாட்டம் முடிந்து நன்றியுரை தெரிவிப்பதற்குள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கூட்டத்துக்கு வந்த மூதாட்டிகளுக்கு சிலருக்கு கைகளில் 250 ரூபாயும், மொய்க்கவரில் வைத்தும் பணம் வழங்கப்பட்டது.