அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முன்னிலையில் தென்காசி குருவிக்குளம் பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளியும் அதிமுக நிர்வாகிகளும் இருந்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்த குருவிக்குளம் கே. தங்கவேலு மற்றும் எம்.அமல்ராஜ் ஆகியோருக்கு பொதுச்செயலாளர் தன்னுடைய வாழ்த்து செய்தியினைத் தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பன்னீர் ஆதரவாளர்கள்..!
