சொதப்பிய கூட்டம்! பன்னீர் ஓட்டம்! ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய மொமண்ட்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் சொதப்பியதால் ஏமாந்துபோன பன்னீர் விரக்தியில் பாதியிலேயே கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பன்னீரின் பந்தா கூட்டத்தில் நாற்காலிகள் காத்து வாங்கிய கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக நினைத்து பவுசு காட்ட நினைத்த பன்னீரின் பொதுக்கூட்டத்தில் ஆள் அரவம் இன்றி நாற்காலிகள் காத்து வாங்கிய காட்சிகள் தான் இவை.

திமுகவுடன் கூட்டு சேர்ந்து சொந்த கட்சிக்கே துரோகம் இழைத்து விட்டு, கூச்சமே இல்லாமல் தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என சவால்விட்ட பன்னீரின் முதல் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தன.

இந்தநிலையில், தொண்டர்கள் வெள்ளத்தில் மூழ்கப்போவதாக கற்பனையில் மிதந்து கொண்டு பொதுக்கூட்டத்திற்கு சென்ற பன்னீருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பன்னீர் நடத்திய பொதுக்கூட்டத்தில் வெறும் 500 பேர் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து போடப்பட்டிருந்த 20 ஆயிரம் நாற்காலிகள் காத்து வாங்கின.

கூட்டத்தில் பங்கேற்றவர்களோ, பன்னீர் எப்போ பேசி முடிக்கிறது, நாம எப்போ காசு வாங்கிட்டு கிளம்புறது என புலம்பியவாறே காத்திருந்தனர். இது ஒருபுறம் இருக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக அலங்கோலமாக காட்சி அளித்தது. இதைகூட முறையாக ஏற்பாடு செய்யாத பன்னீருக்கு பொதுக்கூட்டம் ஒரு கேடா என அங்கிருந்த பெண்கள் முகம் சுளித்தனர்.

பெருந்திரளாக கூட்டம் கூடும் என நினைத்த இலவு காத்த கிளி பன்னீருக்கு, அவரது ஆதரவாளர்கள் சிலர், கூட்டம் வெற்றி பெற்றது போலவே சால்வை அணிவித்ததுதான் நகைச்சுவையின் உச்சம். ஒரு கட்டத்தில் பொதுக்கூட்டம் சொதப்பியதை கண்டு விரக்தியடைந்த பன்னீர், ஆதாரவாளர்களை கடிந்துகொண்டு அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.

பந்தா காட்ட நினைத்து பன்னீர் ஏமாந்த கதை தான் இன்று பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டு வருகிறது. சொந்த கட்சிக்கு துரோகம் இழைத்தால் இதுதான் கதி என்பது பன்னீருக்கு இப்போது புரிந்திருக்கும்.

Exit mobile version