வெட்கம் ரோஷம் இருந்தால் அதிமுகவின் கரை வேட்டியை பன்னீர் கோஷ்டி பயன்படுத்தக் கூடாது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் கழக பொதுச்செயலாளருக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை தமிழகம் முழுவதும் கழக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச்செயலாளருக்கான அங்கீகாரத்தை உயர் நீதிமன்றமும், தொண்டர்களும் உறுதி செய்திருப்பதாக கூறியுள்ளார். வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இந்திய அளவில் மிகப்பெரிய திருப்புமுனை என்றும், தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் இதுபோன்ற மாநாடு நடத்தியதில்லை எனவும் பெருமிதம் கொண்டார். பன்னீரின் கோஷ்டி இனிமேலாவது மானமுள்ளவர்களாக இருந்தால், அதிமுக கரை வேட்டியை கட்டக் கூடாது, கொடியை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து திமுகவின் போராட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கண்ணீர் வராமலேயே கண்ணீர் விட்டவர் தான் உதயநிதி என்றும், கிளிசரினை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார் எனவும் விமர்சித்தார்.

அதிமுக கொடி சின்னம் கரை வேட்டி ஆகியவற்றை இதற்கு மேல் ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு பயன்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை
சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியது, அதன்படி நால்வர் தாக்கல் செய்த மனுக்களும்
தள்ளுபடி செய்யப்பட்ட து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம்-ம் தேதி அதிமுக
பொதுக்குழுவில் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்றும் அதேபோல ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, சரிதான் என
நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதை கொண்டாடும் வகையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடிக்கும் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதேபோல அதிமுக அலுவலகத்திற்கு வந்த தொண்டர்களுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர்
அனைவருக்கும் இளநீர் கொடுத்தார்.

இதன் பின்னர் அதிமுக அலுவலக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் உண்மை நீதி நியாயத்திற்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கொடுத்திருப்பதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவருடன் இருப்பவர்கள்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டு
இருப்பதாகவும் ஜெயகுமார் தெரிவித்தார்.

இனியாவது வெட்கம் ரோஷம் இருந்தால் அதிமுகவின் கறை வேட்டியை ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி பயன்படுத்தக் கூடாது என்றும் அதேபோல கட்சியின் சின்னம் கட்சியின் கொடி கட்சியின் பெயர் ஆகியவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

மாநாடே எங்களுக்கு பெரிய வெற்றி கொடுத்த சூழ்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒற்றை
தலைமை அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவதற்கு ஏதுவாக வாய்ப்பை உருவாக்கி
கொடுத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு சென்றாலும்,
இன்று வந்த தீர்ப்பு போலவே உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பையும் கொடுக்கும் என
தெரிவித்தார்.

நீட் விவகாரத்தில் திமுகவை நம்பி அதிமுக எப்படி போராடும் எங்களுக்கு ரகசியம்
தெரியும் என்று சொல்லிவிட்டு தற்போது எங்களுடன் வந்து போராடுங்கள் என்று
சொல்வது நியாயமா அதிமுகவை பொருத்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம்
என்பதே நிலைப்பாடு ஆனால் திமுக இதில் மக்களை ஏமாற்றிய வருகிறது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நாங்கள் எதற்கு பயப்பட போகிறோம் கனகராஜன் சகோதரர் யாரோட தூண்டுதலிலோ இப்படி பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை சிபிஐ விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

Exit mobile version