ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பாதுகாக்க பாடுபட்டவர் – இராமசாமி படையாச்சியாருக்கு துணை முதலமைச்சர் புகழாரம்

ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைப் பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் ராமசாமி படையாச்சியார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், நல்ல குணமும் எண்ணமும் கொண்டவர்கள் வன்னிய குல மக்கள் என்று தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைப் பாதுகாக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் இராமசாமி படையாச்சியார் எனப் புகழாரம் சூட்டிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா அமல்படுத்தியதாகத் தெரிவித்தார்.

 

 

Exit mobile version