பான் கார்டினை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசமானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. மார்ச் 31 தான் இறுதி நாள் என்று இருந்த கால அவகாசம் தற்போது ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பான் ஆதார் இணைப்பானது 1000 ரூபாய் அபராதத்துடன் இணைக்கப்படுகிறது. எனவே மக்கள் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே பலரும் ஒரே நேரத்தில் இந்த செயலில் ஈடுபடுவதால் இணையமானது அடிக்கடி முடங்குகிறது. எனவே மக்கள் கூடிய விரைவில் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தவும். வருமான வரி சட்டம் 1961-இன் கீழ் விலக்கு பெற்றவர்கள் தவிர்த்து வருமான வரிச் சட்டம் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.