துள்ளிவரும் காளைகளுக்கு புகழ்பெற்ற பாலமேடு

துள்ளிவரும் காளைகளுக்கு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்து பார்ப்போம்..

தை மாதத்தின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலின்போது பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பாலமேடு என்பது மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஜல்லிக்கட்டுக்கும் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. 8,187 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள்.

கடந்த ஆண்டில் இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் தகுதி உடையவையாக ஏற்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டன. 7 சுற்றுகளாக இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் 7 காளைகளை அடக்கிய சிவராஜ் முதல் பரிசையும், 5 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாம் இடத்தையும் வென்றனர். யாருக்கும் பிடிபடாத 7 காளைகளும் போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டன.

இந்தாண்டுக்கான வெற்றி வீரன் யார்? என்பது மாடுகளை அடக்கும் தருணத்தில் தெரிந்து விடும்.

Exit mobile version