மக்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைப் பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகள் இனிப்பு வழங்கி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ள இந்து, சமண, பவுத்த, பார்சி, கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆறாண்டுகள் குடியிருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் இந்து அகதிகள் இனிப்பு வழங்கியும், மேள தாள முழக்கத்துடன் ஆடிப்பாடியும் கொண்டாடி வரவேற்றுள்ளனர். குடியுரிமை கிடைப்பதன்மூலம் தங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.