பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போது, இம்ரான் கானின் கட்சிக்கு, ஆட்சியமைப்பதற்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அங்குள்ள சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார். இந்தநிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சிக்கும், நவாஸ் ஷெரிப் கட்சிக்கும் இடையே நடந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். இம்ரான் கானுக்கு 176 வாக்குகளும், நவாஸ் ஷெரீப்பிற்கு 96 வாக்குகளும் கிடைத்தது. வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றதையடுத்து பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்கிறார். குடியரசு தலைவர் மம்னூர் உஷேன் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Discussion about this post