தமிழக வனத்துறையில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.வனங்களை பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறையில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி தமிழக வனத்துறையில் பணியாற்றி வரும் பழங்குடி மற்றும் மலைவாழ் இனத்தை சேர்ந்த ஆயிரத்து 119 வாட்டை தடுப்பு காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயிலுருந்து 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.