பாச்சுவும் அற்புத விளக்கும் திரைப்படமானது மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஃபீல் குட் திரைப்படமாகும். ஃபகத் ஃபாசில் மற்றும் அஞ்சனா போன்றவர்கள் நடித்து மலையாள சினிமா உலகில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
சாதாரண பார்மசி கடை வைத்திருக்கும் இளைஞனாக பகத் பாசில் தோன்றுகிறார். நீண்ட நாள் திருமணம் ஆகாத அவருக்கு வரன் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் வீட்டார்கள். எங்கு பெண் தேடி சென்றாலும் அது அவருக்கு பாதகமாகவே முடிகிறது. அவரது ஃபார்மசி இருக்கும் இடத்தின் முதலாளி ஒரு வேலையை செய்து முடிக்குமாறு ஃபகத் பாசிலிடம் கூறுகிறார். அதற்கு சம்மதித்து அந்த வேலையில் ஈடுபடுகிறார். முதலாளியின் அம்மா கேரளாவில் உள்ளார், அவரை மும்பைக்கு ரயில் வழியாக கூட்டிவர வேண்டும். இதுதான் ஃபாசிலுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். இதனை திறம்பட முடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
மலையாள சினிமாக்கள் என்றாலே ஒரு எதார்த்த உலகிற்கு நம்மை இட்டு செல்லும். அதனைத் திரைப்படம் நிரூபித்துள்ளது. டாஸ்க்கை நிறைவேற்ற சென்ற இடத்தில் முதலாளியின் அம்மா ஒரு டாஸ்க் தருகிறார். அது ஒரு ஏழை மாணவியின் படிப்பு சம்பந்தப்பட்ட டாஸ்க்காக மாறுகிறது. அவள் படிப்புப்பு என்ன ஆனது? தன்னுடைய ஃபார்மசியை சொந்தமாக்கினாரா என்று இரண்டாம் பாதி கதை நீள்கிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியென்பது, சீரியஸாக கொண்டு செல்லாமல் நகைச்சுவையாக இத்திரைப்படத்தை கொண்டு சென்ற நேர்த்திதான். ஜஸ்டின் பிரபாகரனின் இசை துள்ளல். ஷரன் வேலாயுதனின் ஒளிப்பதிவு குளிர்ச்சி. இயக்கமும் எடிட்டிங்கும் அகிலன் சத்யன் செய்திருப்பதால், அதாவது இயக்குநரே எடிட்டிங்கில் இறங்கியிருப்பதால் கூடுதல் பலம்.