ஓவியா பிறந்தநாள் கொண்டாட்டம் வித் ஆரவ் : வைரலாகும் புகைப்படங்கள்

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா . அந்த படம் வெற்றிபடமாக இருந்தாலும் அதன்பின் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை.பின்பு திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதில் தான் ஆரவ்-ஓவியா இருவரும் நெருங்கிய நண்பரானார்கள். இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது, ஆனால் அவர்கள் அதனை மறுத்து விட்டனர்.

நேற்று ஓவியாவின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு ஆரவ், பிக்பாஸ் காய்த்ரி ரகுராம் மற்றும் நண்பர்கள் பலருடன் ஓவியா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.அந்த புகைப்படங்களை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.எனக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 

Exit mobile version