மகத்-பிராச்சியின் திருமண புகைப்படங்கள் இதோ..

நடிகர் மகத் மங்கத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார்.இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு  மக்களிடையே அதிகம் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகை யாஷிகாவுடன் இவர் காதலில் இருந்தார் என்று கூறப்பட்டது.ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்களின் காதல் தொடரவில்லை.பின்பு அவர் காதலியான பிராச்சியுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை மகத் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.இதனால் ரசிகர்கள் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறீர்கள் என்று கேட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மகத் தனது காதலியான பிராச்சியை திருமணம் செய்துக்கொண்டார்.இந்த திருமண விழாவில் நடிகர் சிம்பு ,அனிருத் மற்றும் இவர்களின் முக்கிய நண்பர்கள் கலந்துக்கொண்டனர்.மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமண விழா நடைபெற்றது.

 

இந்த காதல் ஜோடிக்கு திரைப்பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தின் தொகுப்பு இதோ..

 

 

 

 

 

 

 

Exit mobile version