ஓசூர் ஆவலப்பள்ளி ஏரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகளை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள ஆவலப்பள்ளி ஏரியானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சில நாட்களாக பெய்து தொடர் கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் இரண்டு மாதங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு செல்கின்றன. தற்போது சென்ற ஆண்டைவிட இந்தாண்டு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது, இந்த பறவைகளில் வெள்ளை, கருப்பு, பிங்க் நிறங்கள் கலந்து கால்கள், அலகுகள் நீண்ட உயரமாக அழகாக காட்சியளிப்பதால், இதனை காண பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.
Discussion about this post