பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து கடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு ஜனவரி 11 முதல் இன்று அதிகாலை வரை, 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உட்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் மூலம் 7 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சொன்றுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post