டெல்லியில் மத்திய மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 11 லட்சத்து 52 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக பாஜக அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார்.
Discussion about this post