நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது எனவும் நமது பொருளாதாரம் மீண்டெழும் எனவும், பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாகச் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசின் கொள்கைக் குழுவான நிதி ஆயோக் அமைப்பின் சார்பில் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள், தொழில் துறை தலைவர்கள், நிதி முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்கள், வேளாண்துறை நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஆலோசனைகளை அவர்கள் தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளம் வலுவாக உள்ளது. எனவே, மீண்டு வருவதற்கான சக்தி நமது பொருளாதாரத்துக்கு உள்ளது என தெரிவித்தார்.
Discussion about this post