ஆஸ்கார் விருது பெற தகுதியுடையவர் செந்தில்பாலாஜி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

நடிப்பிற்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற தகுதியுடைய அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குமூலம் அளித்தால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில், அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை விடிய விடிய பார்த்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவறு செய்ததால்தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியிலிருந்து புரட்சித்தலைவி அம்மா நீக்கியதாக கூறினார். ஆனால், அதிமுக ஆட்சி மீது கலங்கம் சுமத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், அவர் அமைச்சராக இருப்பதற்கே தகுதியற்றவர் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியை இரவு முழுவதும் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை பார்த்து வருவதாகவும், அவர் வாக்குமூலம் அளித்தால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக பாடுபட்டு வருவதாக குற்றச்சாட்டிய அவர், செந்தில் பாலாஜி கைது சம்பவம் தமிழக மக்களுக்கு தலைகுனிவு என கூறினார். எனவே, அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று பொம்மை முதல்வர் ஸ்டாலின், தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வேண்டுமென்றே களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி வருவதாக குற்றச்சாட்டினார். இந்தியாவிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும், விஞ்ஞானம் ரீதியில் பல்வேறு ஊழல்களை செய்த விடியா திமுகவினர், ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Exit mobile version