ஆஸ்கார் அவார்டை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் – முன்னாள் எம்பி ஜெயவர்தன்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு போடப்பட்ட விவகாரத்தை எதிர்த்து இந்த பேரணி நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அதிமுகவின் முன்னாள் எம்பி ஜெயவர்தன் செய்தியாளர்களைத் தொடர்புகொண்டு பேசினார்.

விடியா திமுக அரசின் ஸ்டாலினுக்கு தற்போது கொடுக்கும் ஆஸ்கார் விருதினை கொடுக்கலாம் என்று பேசிய அவர், ஸ்டாலின் ஒரு சிறந்த நடிகர் என்று கூறினார். ஸ்டாலின் எனும் சர்வாதிகாரி எதிர்க்கட்சிகளை தினமும் ஒடுக்கி வருகிறார். கட்சி என்கிற பெயரில் ஒரு நாடக கம்பெனியைத் தான் ஸ்டாலின் நடத்தி வருகிறார். தினந்தோறும் எதிர்க்கட்சிகளை ஒடுக்குமுறையுடன் அணுகுகிறார். எதிர்க்கட்சித் தலைவரின் மீதும் அவரது காப்பாளரின் மீதும் பொய்யான வழிப்பறி வழக்கு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்கள் விடியா அரசின் காவல்துறை. அதனை எதிர்த்து அம்மா பேரவை சார்பாக இந்த கண்டன் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்று முன்னாள் எம்பி ஜெயவர்தன் அவர்கள் பேசினார்.

Exit mobile version