நீலகிரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தடுப்பணையை இடிக்க உத்தரவு

நியூஸ் ஜெ செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அனுமதியின்றி கட்டப்பட்ட தடுப்பணையை இடித்து அப்புறப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உதகை அடுத்த தேவர்சோலை பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நீர்நிலைகளை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, அரசின் அனுமதியின்றி தடுப்பணை கட்டிவந்தது. இந்த தடுப்பணையினால் குந்தா மின் நிலையம் மற்றும் கெத்தை மின் நிலையத்திற்கு செல்லும் இந்த தண்ணீர் தடுக்கப்படும் போது மின் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவானது. மேலும் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் மற்றும் விவசாய பாசனமும் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக தேவர்சோலை பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் தனியார் தடுப்பணையை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version