காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆகஸ்ட் மாதம் கர்நாடாக திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம், ஆகஸ்ட் 8 ஆம் தேதி டெல்லியில் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version