சட்டமன்றத்தில் கிருஷ்ணகிரி ஆணவக்கொலைக் குறித்து கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர்.!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடைபெற்ற ஆணவ படுகொலை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கவனயீர்ப்பு தீர்மானத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொது செயலாரும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்ததற்காக ஜெகன் என்ற வாலிபர் பட்டப் பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

Exit mobile version