விழாக்காலம் தொடங்குவதால் நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான மாநகராட்சி ஆணையர், விழாக்காலம் தொடங்குதால் நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக நம்புவதாக தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், 2 ஏக்கர் பரப்பளவில் மீன் சந்தை அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகவும், நவம்பர் 11-ம் தேதி, அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என பதிலளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரை மட்டும் பெசண்ட் நகர் கடற்கரையை அழகான சுத்தமான கடற்கரையாக மாற்ற வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.