சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது…
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை திறந்து விட்டது. நேற்று காலை 10 மணி அளவில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் கிருஷ்ணா நீர் வந்தடைந்தது. இதனை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். இதனையடுத்து ஜீரோ பாயிண்ட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை நள்ளிரவு 12 மணி அளவில் கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.