முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், ஆற்றுப் பாலங்கள், சாலைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் 91 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, பல்வழி பரிமாற்ற மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
வண்டலூர்-மண்ணிவாக்கம் வரையிலா 2.65 கிலோ மீட்டர் நீள பிரதான சாலையையும் திறந்து வைத்தார். மேலும், நாமக்கல், திருப்பூர், பெரம்பூர், விருதுநகர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில், 119 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் அடுக்கு மேம்பாலங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்துவைத்தார்.