மெரினா மீட்பு பணிகள் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் மெரினா மீட்பு பணிகள் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  

தமிழகம் முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள 14 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் ஒருபகுதியாக சென்னை ஐஸ்ஹவுஸ், அண்ணாநகர், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மெரினா மீட்பு பணிகள் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். மெரினா கடலில் குளிக்கும் போது எதிர்பாராதவிதமாக சிலர் அலையில் சிக்கி உயிரிழக்கும் நிலையில், அதை தடுக்கும் விதமாக இந்த மீட்பு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version