ரூ.27.3 கோடி மதிப்பிலான அரசு அலுவலக கட்டடங்கள் திறப்பு: அரசணை வெளியீடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு அலுவலக கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உளிட்ட அரசுத்துறை அலுவலங்கள் பல்வேறு வாடகை கட்டடங்களில் இயங்கி வருவதாகவும், இதற்கான அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே செயல்பட கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஆகிய இடங்களில் 12 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சரோஜா, ஆர்.பி. உதயகுமார், பென்ஜமின், பாண்டியராஜன்,  உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version