கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேப்பூரில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர சிகிச்சை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, தலை சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சிகிச்சை மையத்தினால் கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.
Discussion about this post