உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார் எதிர்க்கட்சித் தலைவர்..!

இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் உதகை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் விவகாரம் தொடர்பாக கவனயீர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார். 1967-68 ஆம் ஆண்டு காலத்தில் அறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது தொடங்கப்பட்டது. 4600 ஹெக்டேர் பரப்பில் நீலகிரி மற்றும் வால்பாறைப் பகுதிகளில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் உதகையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சட்டசபையில் கவன  ஈர்ப்புத் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார்.

கவன ஈர்ப்புத் தீர்மானம் தொடர்பான செய்திகளை முழுமையாக அறிய காணொளியைச் சொடுக்கவும்

Exit mobile version