தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே சுஜித் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறுவன் சுஜித் பலியான விவகாரம் தொடர்பாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழக அரசு 2015ல் கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது.