2020 ஆம் ஆண்டு என்பது அனைவருக்கும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.பல தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.இதில் வாட்ஸ் அப் நிறுவனமும் 2020 ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பல அப்டேட்களை அறிமுகப்படுத்த உள்ளது.
Dark mode :
நாம் இரவு நேரங்களில் தான் அதிகளவில் மொபைல் பயன்படுத்துகிறோம் .அதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.அதனை சரி செய்யும் விதமாக Dark mode வசதியினை 2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவர உள்ளது.
Last seen :
வாட்ஸ் அப்பில் காதலர்களுக்கு பயன்படும் ஒன்று என்னவென்றால்,நீங்கள் அடிக்கடி பேசுபவர் எப்பொழுது ஆன்லைன் வந்துவிட்டு சென்றுள்ளார் என்பது தான்.தற்பொழுது இருக்கும் வாட்ஸ் அப்பில் last seen-ஐ யாருக்கும் காட்டாதப்படி வைத்துக்கொள்ள முடியும்.ஆனால் குறிப்பிட்ட நண்பர்கள் மட்டும் last seen-ஐ பார்க்கும் படி வரவிருக்கும் அப்டேட்டில் வைத்துக்கொள்ளலாம்.
Multiple device support :
தற்போது ஒரு ஸ்மாட் போனில் ஒரு வாட்ஸ் அப் ஐடியை மட்டுமே பயன்படுத்த முடியும்.ஆனால் அறிமுகமாக இருக்கும் அப்டேட்டில் பயனாளரின் ஒரு வாட்ஸ் அப் ஐடியை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களில் பயன்படுத்த முடியும்.
Delete message recovery :
வாட்ஸ் அப்பில் எந்த மெசேஜையும் டெலிட் செய்தால் அதனை மீண்டும் கொண்டு வர முடியாது.ஆனால் இதில் டெலிட் செய்தவற்றை திரும்ப கொண்டு வரும் ஆப்ஷன் இடம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.மேலும் ஒரு மெசேஜை தானே டெலிட் செய்துகொள்வதற்கு ‘1 மணி நேரம் , 1 வாரம், 1 மாதம் ‘ என நேரத்தையும் செட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.