2020-இல் இந்தப் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது…

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயலி என்றால் அது வாட்ஸ்அப் தான். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வாட்ஸ்அப் மூலம் நம்மால் ஒருவரை எளிதாக அணுக முடியும்.

2020 ஆம் ஆண்டு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய மாடல் மொபைல் போன்கள் மற்றும் புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் ஒரு எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து சில ஆண்ட்ராய்ட் மொபைல்களில் வாட்ஸ்அப் செயலியை இயக்க முடியாது என தெரிவித்துள்ளது.2.3.7 android version இல் இயங்கும் மொபைல்கள் மற்றும் ios 8ல் இயங்கும் iPhone களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் windows போன்களில், டிசம்பர் 31 உடன் தனது சேவையை வாட்ஸ்அப் நிறுவனம் துண்டிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version