நியூஸ் ஜெ எதிரொலியால் அரசுப்பேருந்துகளில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அகற்றம்..!

நமது நியூஸ் ஜெ  தொலைக்காட்சியில் எதிரொலி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் அரசுப்பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்த ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரங்கள் பதிக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவானது பல்வேறு கட்ட ஏற்புகள் மறுப்புகளைக் கடந்து விடியா திமுக ஆட்சியில் மீண்டும் கொண்டுவரப்பட்டு பல மாதங்கள் கழித்து தற்போது ஆளுநர் ஒப்புதலுடன் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரிடம் ஒப்புதல் வாங்க பல காலம் தாழ்த்திய திமுகவினால் பல உயிர்கள் பலியாகிவிட்டன. இருப்பினும் தற்போது சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் அரசுப் பேருந்துகளில் இருந்து அகற்றப்படாமல் இருந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் இருபது அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது. இச்செய்தி நமது நியூஸ் ஜெவின் கவனத்திற்கு வந்ததையொட்டி, இச்செய்தியை பரவலாக்கினோம். தற்போது நமது தொலைக்காட்சியின் எதிரொலியால் அவ்விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.

YouTube video player

Exit mobile version