திண்டுக்கல் அருகே விளைந்துள்ள வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்யும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, சின்னாளபட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பனியின் தாக்கம் குறைந்து, வெங்காயம் தற்போது, காய்கள் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அதற்கு ஏற்ற உரிய விலை கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post