திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டில், தமிழகம் குற்றவாளிகளின் தலைநகரமாக மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு பல சம்பவங்கள் அரங்கேறிவிட்டன….நடப்பு ஆண்டில் மட்டும் 181 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது அதை உறுதி செய்கிறது….
ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் உள்ள ரவுடிகள் உட்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் பலருக்கும் கொம்பு சீவி விட்டதைப்போல ஆகிவிட்டது…. நாம் என்ன செய்தாலும் கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பில் பல குற்றங்களை மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடுகின்றனர்…
குற்றவாளிகளை கண்துடைப்புக்காக கைது செய்துவிட்டு மீண்டும் விடுவிடுப்பது, சிறைக்கு சென்றவர்கள் மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது என சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்….. அதற்கு சாட்சியாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே சென்னையில் 33 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்…
கொலை, திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்கள், போதைப் பொருட்களை கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என நடப்பு ஆண்டில் மட்டும் 181 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்…. இவற்றில் பல குற்றங்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் போக்கு காட்டியது.
எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டனர்…. ஆனாலும் இன்னும் பல குற்றவாளிகள் திமுக ஆதரவோடு பொதுவெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதிலும் பெருங்குற்றங்களை செய்யும் பல குற்றவாளிகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம்தான் தாயகமாக இருக்கின்றது. இதன் காரணமாகவே காவல்துறை குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
Discussion about this post