'சொன்னது ஒன்று', 'செய்வது ஒன்று'…. ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு…

500 க்கும் மேற்பட்ட பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியை பிடித்து 4 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சி இருக்கிறது.

தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசியது திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்த திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று, செய்தது ஒன்று என தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மேடைக்கு மேடை பேசிய திமுக தலைவர்கள், ஆட்சிக்கு வந்தது 4 மாதம் ஆகியும் இன்னும் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை வெளியிடவில்லை. நீட்தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் திமுக அரசு ஏற்படுத்திய குழப்பம் 3 மாணவர்களின் உயிரை குடித்திருக்கிறது.

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்பது திமுக அறிக்கை. ஆனால், அதற்கான அறிகுறியே தென்படாமல் இருந்த நிலையில், கடும் அழுத்தத்திற்கு பிறகு கண்துடைப்பாக பெட்ரோல் மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. டீசல் விலையை திமுக அரசு குறைக்காத திமுக அரசு, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்களை மீண்டும் வஞ்சித்து இருக்கிறது.

அதேபோல சமையல் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்ற திமுக வின் வாக்குறுதியும் இன்னும் அறிவிப்பாகவே இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை என்று வாக்குறுதி அளித்தது திமுக அரசு. ஆட்சிக்கு வந்து 4 மாதம் ஆகியும் இந்த வாக்குறுதியும் வெறும் அறிவிப்புடனே நிற்கிறது.

இதேபோல அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் என்ற அறிவித்து விட்டு, ஆட்சிக்கு வந்த பின் சாதாரண பேருந்துகளில் மட்டும் இலவசம் என்று பல்டி அடித்து. அதேபோல ஆட்சிக்கு வந்த உடன் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி, என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் விளம்பரங்களில் வருவது போல கண்டீஷன் அப்ளை என்று கூறி பல்வேறு நிபந்தனைகளை விதித்து நம்பி வாக்களித்த தமிழக மக்களை புலம்ப வைத்து இருக்கிறது திமுக அரசு.

Exit mobile version