ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம், ஜூன் 1 ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்: மத்திய அமைச்சர்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை வரும் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயனாளர்கள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் ரேஷன் அட்டை மூலம் வாங்கி கொள்ளும் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி,  ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் வரும் ஜூன் 1 ஆம் தேதிக்குள், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம் மக்கள் தங்களது ரேஷன் அட்டை மூலம் நாடு முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version