இந்தாண்டு ஜூலை மாதம் புள்ளிவிவரத்தின் படி, ஜி.எஸ்.டியின் வசூல் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 1.65 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவை எட்டியாதகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு ஜூலை ஜி.எஸ்.டி வசூல் விவரங்களை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூலை அதிகம்தான் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகள் நடப்பாண்டு ஜூலையில் பதினைந்து சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
ஜி.எஸ்.டி வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து இருப்பது, இது ஐந்தாவது முறையாகும். அதிக நுகர்வோர் செலவுகள் மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால், ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மத்திய ஜி.எஸ்.டி இந்த ஜூலையில் 29,773 கோடியாகும். மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி 37,623 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜி,எஸ்.டி 85,930 கோடியாகும். கூடுதல் வரி 11,779 கோடியாகும். மொத்தமாக இந்த ஜூலை 1,65,105 கோடியாகும்.
Discussion about this post